கல்லூரியில் இளம் வாக்காளர்கள் விழிப்புணர்வு முகாம்
நாகர்கோவில் பெண்கள் கிறிஸ்தவ கல்லூரியில் முதல் முறை வாக்களிக்கும் மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பெண்கள் கிறிஸ்தவ கல்லூரியில் முதல் இளம் வாக்காளர்கள் மத்தியில் நமது இலக்கு 100 சதவீதம் வாக்குப்பதிவு என்ற விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் எஸ்.காளீஸ்வரி விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசியதாவது- குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளில் பயின்று வரும் மாணவ மாணவியர்களில் முதல் தடவையாக வாக்களிக்க உள்ள இளம் வாக்காளர்கள் மத்தியில் வாக்களிப்பதன் மூலம் தங்களுக்குள்ள ஜனநாயக கடமை உள்ளிட்டவைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
முதல் வாக்காளர்களாகிய நீங்கள் அனைவரும் உங்களது ஜனநாயக கடமையினை முழுமையாக நிறைவேற்றுவதோடு, உங்களது பெற்றோர் உறவினர்கள், அயலகத்தார், நண்பர்களிடம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு, கன்னியாகுமரி மாவட்டம் 100 சதவீதம் வாக்களித்த மாவட்டமாக திகழ உங்களது பங்களிப்பினை வழங்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு பேசினார்.
இந்நிகழ்ச்சியில் அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியர் ஜி.பி.அனில்குமார், மகளிர் கிறிஸ்தவ கல்லூரி முதல்வர் உஷா, அலுவலர்கள், பேராசிரியர்கள், மாணவியர்கள் உள்ளிட்டோர்கள் கலந்து கொண்டார்கள்.