மதுரவாயல் அருகே இளம் பெண்ணிடம் ஆன்லைன் பண மோசடி !
மதுரவாயல் அருகே இளம் பெண்ணிடம் ஆன் லைன் மூலம் 50 ஆயிரம் ரூபாய் பண மோசடி நடந்துள்ளது, ஏமாந்த பெண் புகார் அளித்துள்ள நிலையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.;
By : King 24x7 Angel
Update: 2024-06-19 10:02 GMT
Financial fraud
சென்னை மதுரவாயல் அடுத்த வானகரம் பகுதியில் இளம் பெண்ணிடம் ஆன்லைன் மூலம் 100 ரூபாய் கட்டினால் 150 ரூபாய் தருவதாக பேசி 50,800 ரூபாய் பணம் மோசடி செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட அந்த பெண் மதுரவாயல் காவல் நிலைய குற்றப்பிரிவு காவல் துறையினரிடம் புகார் கொடுத்த நிலையில் மோசடி குறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.