இளம்பெண் தற்கொலை
சோளிங்கர் அருகே குடும்பத்தகராறில் இளம் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;
Update: 2024-05-30 09:18 GMT
தற்கொலை
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் ஒன்றியம் செங்கல்நத்தம் ஊராட்சிக்கு உட்பட்ட ராமாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் தயாளன். இவரது மனைவி தமிழரசி (25). இவர்களுக்கு கவின் (1½) என்ற குழந்தை உள்ளது. தயாளன், தமிழரசி இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று தமிழரசி அதே பகுதிப்பகுதியில் உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதுகுறித்து தகவலறிந்த சோளிங்கர் போலீசார் சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.