சேலத்தில் 2 குழந்தைகளுடன் இளம்பெண் மாயம்
சேலத்தில் 2 குழந்தைகளுடன் இளம்பெண் மாயமான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.;
Update: 2024-06-08 17:47 GMT
இளம்பெண் மாயம்
சேலம் அழகாபுரம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (33). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி பவித்ரா(28). இவர்களுக்கு கீர்த்திக்சாய்(8) என்ற மகனும், கீர்த்திகா (6) என்ற மகளும் உள்ளனர். பவித்ரா, தனது கணவரின் தம்பி வைத்துள்ள டீக்கடையில் வேலை செய்து வந்துள்ளார்.
நேற்று வேலைக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை வீட்டில் குழந்தைகளும் இல்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த சுரேஷ்குமார் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து சுரேஷ்குமார் அழகாபுரம் போலீசில் புகார் அளித்தார். அப்புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தைகளுடன் மாயமான இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.