விபத்தில் இளம் பெண் பலி!
நெல் அறுவடை செய்யும் இயந்திரம் மோதியதில் இளம்பெண் பலியாகியுள்ளார்.;
Update: 2024-04-02 17:02 GMT
இளம்பெண் பலி
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே உள்ள துணிக்கடையில் திமிரி பகுதியை சேர்ந்த 20 வயதுடைய சிவசங்கரி என்ற பெண் வேலை செய்து வந்துள்ளார். வழக்கம்போல துணிக்கடையில் இருந்து டீ குடிப்பதற்காக ஆற்காடு பேருந்து நிலையம் அருகே சென்றுள்ளார். அப்போது அந்த வழியே வந்த நெல் அறுவடை செய்யும் இயந்திரம் சிவசங்கரி மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதுகுறித்து புகாரின் பேரில் ஆற்காடு டவுன் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.