கார் டிரைவரை தாக்கிய வாலிபர் கைது
கார், லாரி முந்தி செல்லுவது தொடர்பான தகராறில் கார் டிரைவரை தாக்கிய வாலிபர் கைது.;
By : King 24x7 Angel
Update: 2024-02-12 06:08 GMT
கார் டிரைவரை தாக்கிய வாலிபர் கைது
கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்தவர் ஜார்ஜ் லோவல் (வயது 53). இவர் பெங்களூருவில் இருந்து காரில் கேரளாவுக்கு வந்து கொண்டிருந்தார். இந்த நிலையில் கார் கருப்பூர் சுங்கச்சாவடி பகுதியில் வந்து கொண்டு இருந்தது. அப்போது பின்னால் ஒரு லாரி வந்தது. இந்த லாரியை திருப்பூரை சேர்ந்த தினேஷ் (27) என்பவர் ஓட்டி வந்தார். இதனிடையே காரும், லாரியும் முந்தி செல்ல முயன்றன. இருப்பினும் ஜார்ஜ்லோவல் லாரிக்கு வழி விடாமல் காரை வேகமாக ஓட்டி வந்தார். இதனால் லாரி டிரைவர், காரை பின் தொடர்ந்து வந்துள்ளார். நெய்க்காரப்பட்டி அருகே உள்ள ஓட்டலில் ஜார்ஜ்லோவல் சாப்பிட சென்றார். அப்போது அங்கு வந்த லாரி டிரைவர் தினேஷ், ஜார்ஜ்லோவலிடம் தகராறு செய்து தாக்கினார். இது குறித்து அவர் கொண்டலாம்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரை கைது செய்தனர்.