சுய நினைவை இழந்த போலீஸ்.... இளைஞர் கைது

போலீஸ் சாப் இன்ஸ்பெக்டரை தாக்கிய தங்கபாண்டி என்ற இளைஞரை சுப்பிரமணியபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கைது செய்தனர்.;

Update: 2024-05-03 12:45 GMT

கோப்பு படம்

மதுரை சுப்பிரமணியபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் த் குமரேசன், ஏட்டு பாலசுப்ரமணியன் ஆகியோர் பழங்காநத்தத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, அதிவேகமாக வந்த இருசக்கர வாகன ஓட்டியை, தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அதில் அவர் அழகப்பன் நகரை சேர்ந்த தங்கபாண்டி (28) என்பது தெரியவந்தது. தங்கபாண்டியிடம் இருந்த செல்போனை வாங்கி வைத்து கொண்டு, அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து செல்வதற்கு குமரேசன் முயன்றார்.

Advertisement

அப்போது, அவரை தகாத வார்த்தைகளில் திட்டியதுடன், அவரை தாக்கி கீழே தள்ளிவிட்டுள்ளார். அதில், கீழே விழுந்த குமரேசனுக்கு பின்தலையில் அடிபட்டுள்ளது. இதில் காயமடைந்த அவர் சுயநினைவை இழந்துள்ளார். இதனை தொடர்ந்து, அங்கு பணியில் இருந்த பாலசுப்பிரமணியன், குமரேசனை மீட்டு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். இந்த சம்பவம் தொடர்பாக, சுப்பிரமணியபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தங்கபாண்டியை கைது செய்தனர்.

Tags:    

Similar News