சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞர் போக்கோவில் கைது
பரமத்தி வேலூர் அருகே சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞரை போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.;
By : King 24X7 News (B)
Update: 2024-05-25 12:05 GMT
கோப்பு படம்
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுகா, மேட்டு மகாதானபுரத்தை சேர்ந்தவர் பரமசிவம். இவரது மகன் ஆனந்தன் (24). இவர் ஜே.சி.பி டிரைவராக நாமக்கல் மாவட்டம், ஜேடர்பாளையத்தில் உள்ள ஒரு வெல்ல ஆலையில் வேலை பார்த்து வந்த போது வெல்ல ஆலைக்கு அருகில் இருந்த 15 வயது சிறுமியிடம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதில் சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பழக்கம் ஏற்பட்டதில் சிறுமி கர்ப்பமானது அவரது பெற்றோர்களுக்கு தெரியவந்தது.
அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இது குறித்து வேலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் செய்தனர். புகாரின் அடிப்படையில் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து போக்சோ சட்டத்தின் கீழ் சிறுமியை ஏமாற்றிய ஆனந்தனை நேற்று கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.