சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட இளைஞர் கைது
சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட இளைஞர் கைது.பன்னிரண்டு மது பாட்டில்கள் பறிமுதல். காவல்துறை நடவடிக்கை.;
Update: 2024-03-31 18:57 GMT
காவல்துறை விசாரணை
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி காவல் எல்லைக்குட்பட்ட, ஈசநத்தம் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை நடப்பதாக சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ரமேஷுக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் மார்ச் 30ம் தேதி காலை 9:45 மணி அளவில், ஈசநத்தம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது, அப்பகுதியில் செயல்படும் டாஸ்மாக் கடை அருகே, சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட, திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர், வெள்ளையா கவுண்டனூர் பகுதியைச் சேர்ந்த கணேசன் மகன் பொன்னுவேல் வயது 25 என்பவர் மது விற்பனையில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக அவரை கைது செய்து, விற்பனைக்கு வைத்திருந்த 12 குவாட்டர் மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். பின்னர் பொன்னுவேல் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் அரவக்குறிச்சி காவல்துறையினர்.