கரூரில் பட்டப் பகலில் பைக்கை திருடிய வாலிபர் கைது

கரூரில் பட்டப் பகலில் பைக்கை திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.;

Update: 2024-05-04 11:12 GMT

காவல் நிலையம்

கரூர் சின்னான்டாங் கோவில் பகுதியை சேர்ந்தவர் துரைசாமி மகன் தங்கவேல் வயது 28. இவர் மே 1-ம் தேதி காலை 11:30 மணியளவில், கரூர் அடுத்த காந்திகிராமம் பகுதியில் செயல்படும், கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் பகுதியில் தனது டூவீலரை நிறுத்திவிட்டு,

மருத்துவமனைக்கு சென்று விட்டு மீண்டும் திரும்ப வந்து தனது வாகனத்தை எடுக்க வந்தபோது, அவரது டூவீலர் காணாதது கண்டு திடுக்கிட்டார். மேலும், மருத்துவமனை வளாகம் முழுவதும் தனது வாகனத்தை தேடியும் கிடைக்கப்பெறாததால், இது குறித்து காவல் நிலையத்தில், தனது டூவீலரை காணவில்லை என புகார் அளித்தார். புகாரை பெற்றுக் கொண்ட காவல் துறையினர்,

Advertisement

இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போது, திண்டுக்கல் மாவட்டம்,மல்லபுரம் அருகே உள்ள சின்னமந்தினி பகுதியைச் சேர்ந்த செல்லப்பாண்டி மகன் பாலமுருகன் வயது 36 என்பவர் அந்த டூவீலரை களவாடியது தெரியவந்தது. பாலமுருகனிடமிருந்து களவாடப்பட்ட வாகனத்தை மீட்டனர். மீட்கப்பட்ட வாகனத்தின் மதிப்பு ரூபாய் 40,000- என மதிப்பீடு செய்த காவல்துறையினர்,

பாலமுருகனை கைது செய்து,அவர் மீது வழக்கு பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர் பசுபதிபாளையம் காவல்துறையினர். சிறையில் அடைக்கப்பட்ட பாலமுருகன் மீது ஏற்கனவே மதுரை மாவட்டம், தல்லாகுளம் பகுதியில் இரண்டு வழக்குகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News