சேலத்தில் முதியவரிடம் பணம் கேட்டு மிரட்டிய வாலிபர் கைது
சேலத்தில் முதியவரிடம் பணம் கேட்டு மிரட்டிய வாலிபர் கைது. போலீசார் நடவடிக்கை.;
Update: 2024-07-04 09:51 GMT
கைது
சேலம்சின்னத்திருப்பதி என்.ஜி.ஜி.ஓ. காலனி பகுதியை சேர்ந்தவர் சுந்தர ரமணன் (வயது 63), ஓய்வுபெற்ற தனியார் நிறுவன ஊழியர். சம்பவத்தன்று காலை வீட்டின் முன்பு நின்று கொண்டு இருந்தார். அப்போது ஒரு வாலிபர் அங்கு வந்து, பாக்கெட்டில் இருக்கும் பணத்தை எடு இல்லாவிட்டால் கொலைச் செய்துவிடுவேன் என்று மிரட்டியுள்ளார். அக்கம்பக்கத்தினர் அங்கு வரவே அந்த வாலிபர் அங்கிருந்து தப்பிஓடிவிட்டார். இது குறித்து கன்னங்குறிச்சி போலீசில் சுந்தரரமணன் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இதில் பணம் கேட்டு மிரட்டியது, அதே பகுதியை சேர்ந்த முகமது பிலாலுதீன் செரீப் (27) என தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.