சின்னமனூர் அருகே வாலிபர் கைது
சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்த வாலிபர் கைது;
Update: 2024-02-16 07:15 GMT
வாலிபர் கைது
தேனி மாவட்டம் சின்னமனூர் காவல் நிலைய சார்ப ஆய்வாளர் மாயன் தலைமையிலான காவல்துறையினர் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்பொழுது சின்னமனூர் மெயின் ரோடு பகுதியில் சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்த சேகர் என்பவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.