திருமணம் செய்து வைக்காததால் இளைஞர் தற்கொலை.

மண்ணச்சநல்லூர் அருகே பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்காதால் மனமுடைந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2024-06-20 07:51 GMT

பைல் படம் 

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே திருவெள்ளறை தெற்கு தெருவைச் சேர்ந்தவர் செல்வராஜ் இவரது மகன் 23 வயதான விக்னேஷ்.இவருக்கு அண்ணன் ஒருவர் உள்ளார்.இந்நிலையில் தனது பெற்றோரிடம் தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு கேட்டுள்ளார்.அதற்கு அண்ணன் திருமணம் முடித்த பிறகு திருமணம் செய்து வைப்பதாக கூறியுள்ளனர். இதனால் பெற்றோருக்கும் விக்னேஸ்க்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதில் மனமுடைந்த விக்னேஷ் வீட்டில் தூக்கிட்டு கொண்டார். இதைக் கண்ட அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக மண்ணச்சநல்லூர் அரசு மருத்துவமனை கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக கூறினார். இதுகுறித்து தகவலறிந்த மண்ணச்சநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்க்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News