வாலிபர் தற்கொலை

சேலம் மாவட்டம், அன்னதானப்பட்டியில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.;

Update: 2024-02-28 13:10 GMT

வாலிபர் தற்கொலை 

சேலம் கருங்கல்பட்டி கலைஞர் நகர் 5-வது கிராசை சேர்ந்தவர் பத்மநாபன், இவரது மகன் முரளி (21), டிப்ளமோ படித்த இவர் கடந்த 3 ஆண்டுகளாக சேலம் அன்னதானப்பட்டியில் உள்ள ஒரு கார்மென்ட்ஸ் நிறுவனத்தில் பணி புரிந்து வந்தார். இந்த நிலையில் அந்த நிறுவனம் அங்கு மூடப்பட்டு வேறு இடத்திற்கு மாற்றப்பட்டது. இதனால் வேலைக்கு செல்லாமல் கடந்த ஒரு வாரமாக வீட்டில் இருந்து வந்தார்.

இதனால் மனம் உடைந்த முரளி நேற்று வீட்டில் மின் விசிறியில் தூக்கு போட்ட நிலையில் தொங்கினார். இதனை பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனை கேட்ட உறவினர்கள் கதறி துடித்தனர். இது குறித்து செவ்வாய்ப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News