வாலிபர் தற்கொலை – காவல்துறையினர் விசாரணை
தென்காசி மாவட்டம், திப்பனம்பட்டி மலையராமபுரத்தில் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.;
Update: 2024-04-26 01:29 GMT
தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் அருகே உள்ள திப்பனம்பட்டி மலையராமபுரத்தை சேர்ந்தவர் காளி ராஜா (24) இவர் கட்டிட தொழிலாளியாக வேலை செய்து வருகிறார் .ஆன இவர் வழக்கம்போல் வேலைக்கு செல்வதாக சென்றவர் பாவூர்சத்திரம் ரயில் நிலைய பயணிகள் நிழற்குடையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த ரயில்வே போலீசார் உடலை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து ரயில்வே போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.