குடும்பத்தகராறில் சோகம் : வாலிபர் தற்கொலை!

பசுவந்தனை அருகே குடும்பத் தகராறில் வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.;

Update: 2024-06-17 02:03 GMT
குடும்பத்தகராறில் சோகம் : வாலிபர் தற்கொலை!

தற்கொலை 

  • whatsapp icon

தூத்துக்குடி மாவட்டம் பசுவந்தனை அருகே குடும்பத் தகராறில் வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், பசுவந்தனை அருகில் உள்ள மேலமங்கலம் கிராமம் கீழ தெருவைச் சேர்ந்தவர் பெரியசாமி மகன் முத்து செல்வம் (20).

இவர் குடும்ப பிரச்சனையில் தனது தாய், தந்தையை பிரிந்து தனியாக வசித்து வந்தாராம். இந்நிலையில் நேற்று அவர் தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து பசுவந்தனை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் முத்துமணி வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News