வேலையில்லா விரக்தியில் வாலிபர் தற்கொலை
சேலத்தில் வேலை கிடைக்காததால் இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.;
Update: 2024-01-26 02:48 GMT
தற்கொலை
சேலம் ,நெத்திமேடு கே.பி. கரடு பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 29). தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்த இவர் கடந்த சில ஆண்டுகளாக வேலை இல்லாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த விக்னேஷ் வீட்டில் தூக்குப்போட்டு கொண்டார்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்த போது விக்னேஷ் ஏற்கனவே விட்டது தெரியவந்தது. இது குறித்து அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.