காதலிக்கு வேறு இடத்தில் திருமணம் ; வாலிபர் தற்கொலை

குளச்சல் அருகே காதலிக்கு வேறு இடத்தில் திருமணம் செய்து வைத்ததால் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2024-06-16 11:47 GMT
தற்கொலை செய்த சிபின் ஆஸ்கர்

குமரி மாவட்டம்  குளச்சல் அருகே கோடி முனையை சேர்ந்தவர் சகாய வில்சன். இவர் குருந்தன்கோடு  ஊராட்சி ஒன்றிய கவுன்சிலராக உள்ளார். இவரது மனைவி கடந்த ஏழு வருடத்திற்கு முன்பு நடந்த விபத்தில் உயிரிழந்தார்.      இவர்களுக்கு இரண்டு மகள்கள்  சிபின்  ஆஸ்கார் (23) என்ற மகனும் உண்டு. சிபின் ஆஸ்கர் பிளஸ் டூ முடித்து விட்டு டூரிசம் படித்திருந்தார். மேலும்  விசைப்படகில் மீன்பிடி தொழிலாளியாகவும் வேலை பார்த்து வந்தார்.      கடந்த சில நாட்களாக அவர் பக்கத்து ஊரை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அந்த பெண்ணுக்கு சமீபத்தில் வேறு இடத்தில் திருமணம் முடிந்தது. இதனால் சிபின்  ஆஸ்கர் மனம் உடைந்து காணப்பட்டார்.        

இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சிபின் ஆஸ்கர் அறைக்குள் சேலையில் தூக்கு போட்டு இறந்து கிடந்தார். மாலையில் வீட்டுக்கு வந்த சகாய வில்சன்  மகன் தூக்கில் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.       இது குறித்த அவர் குளச்சல் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அவரது உடலை மீட்டு பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம்  அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News