அரசு பஸ்மோதி வாலிபர் பலி
புதுக்கோட்டை மாவட்டம், கூழையான்விடுதி அருகே அரசு பேருந்து மோதி வாலிபர் பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.;
Update: 2024-06-02 05:28 GMT
தற்கொலை
ஆலங்குடி அருகே வாராப்பூர் ஊராட்சிக்குட்பட்ட நெம்மேலிப்பட்டியைச் சேர்ந்தவர் செல்வன். இவரது மகன் மணிவண்ணன் (22). இவர் பைக்கில் நேற்று முன்தினம் இரவு பெருங்களூரிலிருந்து புதுக்கோட்டைக்கு சென்றுள்ளார். கூழையான்விடுதி அருகே சென்றபோது எதிரே புதுக்கோட்டையிலிருந்து தஞ்சாவூர் நோக்கி சென்ற அரசு பஸ் பைக்மீது மோதியது.
இதில் படுகாயமடைந்த மணிவண்ணன் அந்த இடத்திலேயே இறந்தார். இது குறித்து தகவ லறிந்த அங்குவந்த சம்மட்டி விடுதி போலீசார் மணிவண் ணன் உடலை கைப்பற்றி புதுக்கோட்டை அரசு மருத்து வக்கல்லுாரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.