சோழிங்கநல்லூர் சிக்னல் அருகே மாநகர பேருந்தில் வாலிபர் உயிரிழப்பு!!

சோழிங்கநல்லூர் சிக்னல் அருகே மாநகர பேருந்தில் வாலிபர் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2024-07-13 04:59 GMT

DeadBody

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அருகே உள்ள சேத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் அஜித்குமார் (வயது28) கொத்தனார். இவர் சென்னை செம்மஞ்சேரியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெறும் கட்டுமான பணிக்காக தனது தம்பி பிரேம் குமார் மற்றும் நண்பர்கள் என மொத்தம் 5 பேர் ரெயில் மூலம் இன்று காலை சென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கு வந்தனர். பின்னர் அஜித்குமார் உள்பட 5 பேரும் அங்கிருந்து மாநகர பேருந்தில் செம்மஞ்சேரிக்கு சென்று கொண்டிருந்தனர். காலை 9 மணியளவில் சோழிங்கநல்லூர் சிக்னல் அருகே மாநகர பஸ்வந்து கொண்டு இருந்த போது திடீரென அஜித் குமாருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவர் பேருந்திலேயே சுருண்டு விழுந்தார். இதனை கண்டு உடன் வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டனர். அங்குள்ள பேருந்து நிறுத்தத்தில் பேருந்து நின்றதும் அஜித் குமாரை கீழே இறக்கி மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றனர். அதற்குள் அஜித்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இதை அடுத்து காவல்துறைக்கும் ஆம்புலன்ஸுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் போலீசார் தமாதமானதால் பேருந்து நிறுத்தத்திலேயே அஜித் குமாரின் உடல் கிடந்தது. காலை நேரம் என்பதால் ஏராளமான பயணிகள் அந்த  பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தனர். அவர்களும் அருகில் உயிரிழந்தவர் உடல் கிடப்பதை கண்டு எந்த சளனமும் இல்லாமல் அருகிலேயே நின்றபடி வரும் பேருந்துகளில் ஏறிச்சென்றனர். இதற்கிடையே சுமார் 2 மணி நேரத்திற்கு பின்னர் காலை 11 மணியளவில் செம்மஞ்சேரி காவல்துறையினர் வந்து இறந்த அஜித்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அஜித்குமார் இறப்புக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News