கணக்கம்பாளையத்தில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

திருப்பூர் கணக்கம்பாளையம் அம்பாள் நகரைச் சேர்ந்த வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.;

Update: 2024-06-27 11:47 GMT

தற்கொலை செய்து கொண்ட வாலிபர்

திருப்பூர் கணக்கம்பாளையம் அம்பாள் நகரை சேர்ந்தவர் வெள்ளியங்கிரி. இவருடைய மனைவி ரத்னாதேவி. இவர்களது மகன் ஸ்ரீதர் (22). இவர் ஒர்க் ஷாப்பில் வெல்டராக வேலை செய்து வந்தார். இவருக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது.

இவரை குடிப்பழக்கத்தில் இருந்து திருத்த கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு பெற்றோர் வீட்டை காலி செய்து ஈரோடு விஜயமங்கலம் பொன்முடி பகுதியில் குடியேறினர். ஸ்ரீதர் அங்கு செல்ல மறுத்து வேலை பார்க்கும் இடத்திலேயே தங்கி இருந்து வேலை செய்து வந்திருந்தார். பெற்றோர் அழைத்தும் அவர் செல்லவில்லை.

Advertisement

சம்பவத்தன்று ஸ்ரீதர் தனது செல்போனில் என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை என்றும், இது நானாக எடுத்த முடிவு என்றும் செல்போனில் ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு இரவு தான் தங்கி இருந்த அறையின் மேற்கூரையில் தூக்குப்போட்டுக்கொண்டார். இதை அறிந்த அக்கம் , பக்கத்தினர் அவரை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பெருமாநல்லூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News