அதிவேகமாக இருசக்கர வாகனத்தை இயக்கிய இளைஞர் படுகாயம்

கரூர் மாவட்டம்,கட்டளை பகுதியை சேர்ந்த இளைஞர் அதிவேகமாக இருசக்கர வாகனத்தை இயக்கியதால் ஏற்பட்ட விபத்தில் படுகாயமடைந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குபதிவு செய்தனர்.;

Update: 2024-02-18 11:04 GMT

இளைஞர் படுகாயம்

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுக்கா, கட்டளை பகுதியைச் சேர்ந்தவர் மகேந்திரன் மகன் சுபாஷ் வயது 21. இவர் பிப்ரவரி 16ஆம் தேதி மாலை 4: 3/4 மணியளவில், கரூர் மாவட்டம் பசுபதிபாளையம் காவல் எல்லைக்குட்பட்ட சணப்பிரட்டியில் இருந்து பசுபதிபாளையம் செல்லும் சாலையில் டூவீலரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, பசுபதி பாளையம் செல்வம் நகர் பகுதியில் உள்ள பாலம் அருகே செல்லும்போது, டூவீலரை வேகமாக இயக்கியதால், டூவீலர் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் சுபாஷுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு, தனியார் ஆம்புலன்ஸ் மூலம், கோவையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் அறிந்த சுபாஷின் உறவினர் ஆனந்தன் வயது 36 என்பவர், இது குறித்து பசுபதிபாளையம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், டூவீலரை வேகமாக ஓட்டி, விபத்து ஏற்படுத்திய சுபாஷ் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் பசுபதிபாளையம் காவல்துறையினர்.

Tags:    

Similar News