சாலை விபத்தில் இளைஞர் உயிரிழப்பு - மற்றொரு இளைஞர் படுகாயம்
திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த புளியஞ்சோலை அருகே கோழிப்பண்ணை பகுதியில் மோட்டார் பைக்கில் சென்ற இரு இளைஞர்கள் சாலையோரம் இருந்த கல் மீது மோதிய விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். மற்றொரு இளைஞர் படுகாயம் அடைந்தார்.
Update: 2024-04-10 16:29 GMT
திருச்சி பெரிய மிளகுபாறை புது தெருவைச் சேர்ந்தவர் 21 வயதான கோகுல்கிருஷ்ணன். அதே பகுதி நடுத்தெருவைச் சேர்ந்தவர் 18 வயதான அருண்குமார். இவர்கள் இருவரும் நண்பர்கள். இவர்கள் இருவரும் புளியஞ்சோலையில் இருந்து துறையூர் நோக்கி துறையூர் புளியஞ்சோலை சாலையில் மோட்டார் பைக்கில் வந்து கொண்டிருந்தனர். மோட்டார் பைக்கை அருண்குமார் ஓட்டி வந்துள்ளார். அப்போது புளியஞ்சோலை கோழி பண்ணை அருகே வந்து கொண்டிருந்தபோது சாலையோரம் இருந்த கல் மீது எதிர்பாராத விதமாக மோட்டார் பைக் மோதி விபத்துக்குள்ளானது. இதில் தூக்கி வீசப்பட்டதில் படுகாயம்டைந்த அருண்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது நண்பர் கோகுல் கிருஷ்ணன் படுகாயம் அடைந்தார். இந்த விபத்து குறித்து தகவலறிந்த துறையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்த கோகுல்கிருஷ்ணனை மீட்டு சிகிச்சைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் விபத்தில் உயிரிழந்த அருண்குமாரை மீட்டு உடற்கூறு ஆய்விற்க்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பின்னர் இந்த விபத்து குறித்து துறையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.