இளைஞர் இலக்கியத் திருவிழா போட்டி - பரிசுகள் வழங்கிய ஆட்சியர்

பெரம்பலூர் அரசு கலை அறிவியல் கல்லூரியில் நடந்த, இளைஞர் இலக்கியத் திருவிழாபோட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் கற்பகம் பரிசு வழங்கி பாராட்டினார்

Update: 2024-02-29 02:45 GMT

வெற்றிபெற்ற மாணவர்கள் 

குரும்பலூரில் இயங்கி வரும் பெரம்பலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் காவேரி இளைஞர் இலக்கியத்திருவிழா பிப்ரவரி 14 மற்றும் 15 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்றது. பள்ளிக்கல்வித்துறை, பொதுநூலக இயக்ககம், பெரம்பலூர் மாவட்ட நூலக ஆணைக்குழு சார்பாக குரும்பலூரில் உள்ள பெரம்பலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவ, மாணவியர்களிடையே இலக்கியத் திறனை மேம்படுத்தும் வகையில் இளைஞர் இலக்கியத்திருவிழா நடத்தப்பட்டது.

இவ்விழாவில் கல்லூரி மாணவ, மாணவியர்க்கு இரண்டு நிமிட பேச்சுப்போட்டி, தொன்மையும் தொடர்ச்சியும், நூல் அறிமுகம், இலக்கிய வினாடி வினா, ஓவியப்போட்டி, உடனடி ஹைக்கூ, பொது மொழியும் வட்டார வழக்குகளும், விவாத மேடை, பேச்சுப்போட்டி, உள்ளிட்ட 10 வகையான போட்டிகள் நடத்தப்பட்டன. இப்போட்டியில் வெற்றி பெற்ற 30 மாணவ, மாணவியர்களுக்கு, பரிசு வழங்கும் நிகழ்ச்சி பிப்ரவரி 27ஆம் தேதி அளவில்மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, முதல் பரிசு ரூ.5000, இரண்டாம் பரிசாக ரூ.4000 மற்றும் மூன்றாம் பரிசாக ரூ.3000 மற்றும் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் கற்பகம் வழங்கி பாராட்டினை தெரிவித்தார். இந்நிகழ்வில், மாவட்ட நூலக அலுவலர் சந்திரசேகரன்,நூலக அலுவலர் புவனேஸ்வரி, ராதாகிருஷ்ணன். பெரம்பலூர் அரசு மற்றும் கலை அறிவியல் கல்லூரி முதல்வர் ரேவதி , கல்லூரி பேராசிரியர்கள்,சௌந்தரராஜன், சந்திரமௌலி உள்ளிட்ட கல்லூரி மாணவ, மாணவியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News