வாரணவாசியில் இளைஞருக்கு கத்திக்குத்து: போக்குவரத்து ஸ்தம்பிப்பு
வாரணவாசி சந்திப்பில் ஆகாஷை மடக்கி, சரத்பாபுவின் அண்ணன் தினேஷ் கத்தியால் கழுத்தில் குத்தி விட்டு தப்பினார்.;
By : King 24X7 News (B)
Update: 2024-04-21 12:14 GMT
போக்குவரத்து ஸ்தம்பிப்பு
காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அடுத்த வாரணவாசியைச் சேர்ந்தவர் ஆகாஷ், 23. நேற்று முன்தினம் இரவு, வாரணவாசியில் இருந்து தொல்லாயி சாலையில் பைக்கில் சென்றார். அப்போது, சரத்பாபு என்பரின் பைக்கில் மோதியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், வாரணவாசி சந்திப்பில் ஆகாஷை மடக்கி, சரத்பாபுவின் அண்ணன் தினேஷ் கத்தியால் கழுத்தில் குத்தி தப்பினார். ஆத்திரமடைந்த அப்பகுதிச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர், வண்டலுார் -- வாலாஜாபாத் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
இதனால், மூன்று மணிநேரத்திற்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தினேஷ் மீது கொலை, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன."