ஆற்றில் அடித்து செல்லப்பட்ட இளைஞர் - தேடும் பணி தீவிரம்
முக்கூடல் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட இளைஞரை தீயணைப்பு துறையினர் தேடும் பணியில் ஈடுபட்டனர்.;
By : King 24x7 Angel
Update: 2024-02-26 06:42 GMT
ஆற்றில் அடித்து செல்லப்பட்ட இளைஞர் - தேடும் பணி தீவிரம்
காஞ்சிபுரத்தை சேர்ந்த இளைஞர் நவீன் தனது உறவினர்களுடன் முக்கூடல் ஆற்றில் நேற்று (பிப்.25) குளிக்கும் போது நீரில் அடித்துச் செல்லப்பட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தேடும் பணியில் ஈடுபட்டனர்.பல்வேறு இடங்களில் நேற்று இரவு வரை தேடியும் இவர் கிடைக்காததால் முக்கூடல் தீயணைப்பு துறையினர் இன்று (பிப். 26) காலை முதல் மீண்டும் நவீனை தேடும் பணியில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகின்றது.