மணல் கடத்திய வாலிபர் கைது
குடியாத்தம் அருகே மணல் கடத்திய வாலிபரை குடியாத்தம் டவுன் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கைது செய்துள்ளார்.;
Update: 2024-05-25 10:03 GMT
மணல் கடத்திய வாலிபர் கைது
வேலூர் மாவட்டம்,குடியாத்தம் டவுன் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி, சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் உள்ளிட்ட போலீசார் குடியாத்தம் நெல்லூர் பேட்டை பாவோடும் தோப்பு பகுதியில் கவுண்டன்ய மகாநதி ஆற்றுப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் மணலை மூட்டை கட்டி கடத்திச் சென்ற வாலிபரை மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர்.
அதில் அவர் குடியாத்தம் நெல்லூர்பேட்டை என்.எஸ்.கே. நகர் பகுதியைச் சேர்ந்த கிருபாகரன் (20) என்பது தெரியவந்தது. தொடர்ந்து குடியாத்தம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து கிருபாகரனை கைது செய்து, மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.