இன்ஸ்பயர் விருதுக்கு ஜமீன் அகரம் 8ம் வகுப்பு மாணவி தேர்வு
இன்ஸ்பயர் விருதுக்காக வேட்டவலம் அடுத்த ஜமீன் அகரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி 8ம் வகுப்பு மாணவி திருவேனி தேர்வு செய்யப்பட்டார்.;
By : King 24X7 News (B)
Update: 2024-02-17 10:23 GMT
பாராட்டு தெரிவித்த ஆசிரியர்கள்
மத்திய அரசு விருதுக்கு ஜமீன் அகரம் அரசு பள்ளி மாணவி தேர்வு செய்யப்பட்டார். பள்ளி மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தை மேம்படுத்தும் வகையில் ஒவ்வொரு வருடமும் இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்துறை சார்பில் (இன்ஸ்பயர்) விருது வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி 2023-24ம் ஆண்டிற்கான (இன்ஸ்பயர்) விருதுக்காக வேட்டவலம் அடுத்த ஜமீன் அகரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் 8ம் வகுப்பு மாணவி திருவேனி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதையொட்டி விருதுக்கு தேர்வு பெற்ற மாணவிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் முருகன் பரிசு வழங்கி பாராட்டினார்.
மேலும் பள்ளி ஆசிரியர்கள் மணிமேகலை, கௌரி, சுடர்விழி, அருண்குமார், மார்கிரேட்மேரி மற்றும் பள்ளி மாணவர்கள் மாணவியை பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.