மண்டல அலுவலர்கள் பயிற்சிக் கூட்டம் - ஆட்சியர் பங்கேற்பு!
தூத்துக்குடி பாராளுமன்ற தேர்தலுக்காக மண்டல அலுவலர்களுக்கான பயிற்சி கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி தலைமையில் நடைபெற்றது.
Update: 2024-03-01 11:48 GMT
இந்தியத் தேர்தல் ஆணையம் வரும் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு, தேர்தல் பணியில் ஈடுப்படுத்தப்படும் ஒவ்வொரு அலுவலர்களுக்கும் பயிற்சிகளை வழங்க அறிவுரை வழங்கியதின்படி, பல்வேறு நிலை அலுவர்களுக்கு பயிற்சிகளை வழங்கப்பட்டு வருகிறது. இதனடிப்படையில் இன்று (29.02.2024) மண்டல அலுவலர்களுக்கான பயிற்சியானது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அவர்களால் தூத்துக்குடி மாவட்டத்தில் மண்டல அலுவலர்கள் ஈடுப்படும் 142 (136 மண்டல அலுவலர்கள்+6 ரிசர்வ் அலுவலர்கள்) அலுவர்களுக்கு இன்று பயிற்சி வழங்கப்பட்டது. இப்பயிற்சியில் மண்டல அலுவலர்களின் கடமைகள், பொறுப்புகள் ஆகியவைகள் விளக்கப்பட்டது. மேலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் தொடர்பாகவும் பயிற்சி வழங்கப்பட்டது. இப்பயிற்சியில் மாவட்ட வருவாய் அலுவலர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) மற்றும் மாநில, மாவட்ட சிறப்பு பயிற்சியாளர்களும் இப்பயிற்சியில் ஈடுப்பட்டு பயிற்சி வழங்கினர்.