நத்தம் மாரியம்மன் கோயிலில் மாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் மாரியம்மன் கோயில் மாசிப் பெருந்திருவிழா திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Update: 2024-02-13 06:37 GMT


திண்டுக்கல் மாவட்டம், நத்தம் மாரியம்மன் கோயில் மாசிப் பெருந்திருவிழா திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.


தென் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயில்களில் நத்தம் மாரியம்மன் கோயிலும் ஒன்றாகும். ஒவ்வொரு ஆண்டும் இக் கோயிலில் பல்வேறு விழாக்கள் நடைபெறும். இதில் முக்கியமானது மாசிப் பெருந் திருவிழாவாகும். இந்த ஆண்டு இத்திருவிழா திங்கட்கிழமை காலை கோயில் முன் உள்ள கொடிமரத்தில் மாரியம்மன் அம்மன் உருவம் பொறித்த கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது. இதில் தமிழ்நாடு இந்து சமய அற நிலையத்துறை கோயில் செயல் அலுவலர் சூரியன், கோயில் பூசாரிகள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்து வழிபட்டனர்.
Tags:    

Similar News