கடன் வசூல் மைய தீர்ப்பாயம்: ஒன்றிய அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கண்டனம்!!
By : King 24x7 Desk
Update: 2024-09-24 10:15 GMT
கடன் வசூல் மைய தீர்ப்பாயம் தொடர்பான வழக்கில் ஒன்றிய அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது. கடனை செலுத்தாததால் சொத்துகளை ஏலம் விடுவதாக வங்கி அளித்த நோட்டீஸை ரத்து செய்யக் கோரி ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. அந்த மனு விசாரணையில், கேரள எர்ணாகுளம் கடன் வசூல் மையத்திற்கு மனுதாரர்களை செல்ல சொல்வது ஏற்கத்தக்கது அல்ல. மதுரை, கோவை தீர்ப்பாயங்களில் அதிகாரி இல்லை என்பதால் கேரள செல்ல சொல்வது ஏற்கத்தக்கதல்ல. ஒன்றிய அரசின் இந்த செயல்பாடு கடன் வசூல் தீர்ப்பாயங்களை அழிப்பதுபோல் உள்ளது. இதனை ஒன்றிய நிதித்துறை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.