கிராமப்புறங்கள், தொலைதூர பகுதிகளில் சுகாதார சேவைகள் மேம்படுத்த ஏஐ உதவும்: மா.சுப்பிரமணியன்

Update: 2024-09-26 12:31 GMT

 மா.சுப்பிரமணியன்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

கிராமப்புறங்கள், தொலைதூர பகுதிகளில் சுகாதார சேவைகள் மேம்படுத்த ஏஐ உதவும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மேலும் மருத்துவத்தில் செயற்கை நுண்ணறிவு என்ற தலைப்பு, இன்றைய வேகமாக மாறிக்கொண்டிருக்கும் மருத்துவத்துறைக்கு மிக முக்கியமானது. செயற்கை நுண்ணறிவு உலகளவில் மருத்துவத்துறையில் பல மாற்றங்களை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் சுகாதார சேவைகளை மேம்படுத்துவதற்காக பெரும் சாத்தியக்கூறுகளை செயற்கை நுண்ணறிவு கொண்டுள்ளது. தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் உலகத் தரத்திலான மருத்துவ சேவைகளை பெறுவதை உறுதிப்படுத்த குறிப்பாக கிராமப்புறங்கள் மற்றும் தொலைதூர பகுதிகளில் உள்ள சுகாதார சேவைகள் மேம்படுத்த ஏஐ பெரிதும் உதவும் என நம்புகிறேன் என்றார்.

Similar News