கூடுதல் தொகை வசூலித்தால் அங்கீகாரம் ரத்து: தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு எச்சரிக்கை!!
By : King 24x7 Desk
Update: 2025-09-23 12:40 GMT
Doctor
தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேரும் மாணவர்களிடம் அரசு கட்டணத்தை விட, அதிகம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு தேர்வுக் குழு, மருத்துவக் கல்வி இயக்குநகரம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அனைத்து தனியார் கல்வி நிறுவனங்களும் நீதிமன்ற தீர்ப்புக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும். மாணவர்களை மிரட்டி கூடுதல் தொகை வசூலிக்க நினைத்தால் அந்த கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.