நாளை கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் பிரசாரம் : கடும் நிபந்தனைகளுடன் போலீசார் அனுமதி!!
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நாளை (சனிக்கிழமை) நாமக்கல், கரூர் ஆகிய 2 பகுதிகளில் பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார்.;
Vijay
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நாளை (சனிக்கிழமை) நாமக்கல், கரூர் ஆகிய 2 பகுதிகளில் பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார். இதையடுத்து, பாதுகாப்பு மற்றும் அனுமதி கேட்டு தவெக சார்பில் போலீசில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. கரூரில் விஜய் பிரசாரம் செய்வதற்காக லைட் ஹவுஸ் கார்னர், உழவர் சந்தை, கரூர் பஸ் நிலைய மனோகரா கார்னர் ரவுண்டானா ஆகிய 3 இடங்களில் ஒன்றை ஒதுக்குமாறு காவல்துறையினரிடம் அனுமதி கோரினர். லைட் ஹவுஸ் கார்னர் ஒதுக்குவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு, பின்னர் அந்த இடத்தை ஒதுக்க இயலாது என காவல்துறை மறுத்து விட்டதாக கூறப்பட்டது. இன்று காலை வரை விஜய் பிரசாரம் செய்யும் இடம் இறுதி செய்யப்படாத நிலையில், தற்போது கடும் நிபந்தனைகளுடன் போலீசார் அனுமதி அளித்துள்ளனர். அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று பிரசாரம் செய்த ஈரோடு ரோடு வேலுசாமிபுரம் பகுதியில் நின்று பேசுவதற்கு விஜய்க்கு ஒதுக்கப்பட்டுள்ளது. நாமக்கல்லில் விஜய் பிரசாரம் செய்ய போலீசார் அனுமதி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.