மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மண்டபம் அருகே பிரசாதம் தயாரிப்பதை ஏற்க முடியாது: ஐகோர்ட் கிளை
By : King 24x7 Desk
Update: 2025-10-23 11:42 GMT
madurai highcourt
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மண்டபம் அருகே அடுப்பு வைத்து பிரசாதம் தயாரிப்பதை ஏற்க முடியாது. மாற்று வழி என்ன என்பது குறித்து கோயில் இணை ஆணையர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சொத்துகளை முறையாக மீட்டு பராமரிக்க உத்தரவிடக் கோரிய வழக்கில் கூடுதல் ஆவணங்களுடன் மனுத் தாக்கல் செய்ய கால அவகாசம் கோரப்பட்ட நிலையில் ஒத்திவைக்கப்பட்டது.