கடலூர் அருகே பைக் மீது ஏடிஎம் வாகனம் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழப்பு!!
By : King 24x7 Desk
Update: 2025-11-01 14:27 GMT
கோண்டூர் அருகே பைக் மீது ஏடிஎம் வாகனம் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்தனர். தந்தை, மகன் சம்பவ இடத்திலேயே பலியான நிலையில், தாயும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது. வாகனம் நேருக்கு நேர் மோதியதில், அதன் கீழே சிக்கிய பைக் 20 மீட்டர் தூரம் வரை இழுத்துச் செல்லப்பட்டது.