ஆயுத பூஜை தொடர் விடுமுறையை முன்னிட்டு அக்.03ம் தேதி அன்று விடுமுறை: தமிழக அரசு

Update: 2025-09-30 14:22 GMT

Tn govt

ஆயுத பூஜை தொடர் விடுமுறையை முன்னிட்டு அக்டோபர் மூன்றாம் தேதி வெள்ளிக்கிழமை அன்று விடுமுறை தினமாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அக்டோபர் 1ம் தேதி ஆயுத பூஜை அன்றும், அக்டோபர் 2ம் தேதி விஜயதசமி அன்றும் அரசு விடுமுறையாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அக்டோபர் 3ம் தேதியையும் விடுமுறை தினமாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து நாளை முதல் தொடர்ச்சியாக 5 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

Similar News