சபரிமலை கோயில் வரலாற்றில் நேற்று ஒரே நாளில் 1 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம்!!

Update: 2024-12-24 08:12 GMT

Sabarimala Ayyappan temple 

சபரிமலை கோயில் வரலாற்றில் நேற்று ஒரே நாளில் 1 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். நேற்று அதிகாலை 3 மணி முதல் இரவு 11 மணிக்குள் 1,06,621 பேர் தரிசனம் செய்துள்ளனர் .உடனடி முன்பதிவு மூலம் 22,769 பேரும், புல்மேடு வழியாக வந்த 5175 பேரும் நேற்று தரிசனம் செய்து திரும்பினர். நேற்று வரை 30.78 லட்சம் பேர் சபரிமலை ஐயப்பன் கோயிலில் தரிசனம் செய்துள்ளனர். கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது சுமார் 4 லட்சம் பேர் அதிகமாக இதுவரை தரிசனம் செய்துள்ளனர்

Similar News