அடுத்த செக் வைத்த டிரம்ப்..!! மருந்துகளுக்கு 100% இறக்குமதி வரி!!
வரும் 1ஆம் தேதி முதல் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100% இறக்குமதி வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்திருக்கிறார்.;
டொனால்டு டிரம்ப்
அக்டோபர் 1ஆம் தேதியில் இருந்து மருந்து பொருட்களுக்கு 100% இறக்குமதி வரி என்ற இந்த அறிவிப்பு இந்திய மருந்து உற்பத்தி நிறுவனங்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும். அதாவது இது தொடர்பாக டிரம்ப் வெளியிட்டு இருக்கக்கூடிய பதிவில் அக்டோபர் 1ஆம் தேதியில் இருந்து எந்த ஒரு பிராண்டட் அல்லது காப்புரிமை பெற்ற மருந்து தயாரிப்புக்கும் 100% வரி விதிப்போம் என தெரிவித்திருக்கிறார். ஒரு நிறுவனம் அமெரிக்காவில் தன்னுடைய மருந்து உற்பத்தி ஆலையை கட்டவில்லை என்றால் இந்த வரி அந்த நிறுவனத்திற்கு பொருந்தும் எனக் கூறியிருக்கிறார். அதேபோல அக்டோபர் 1ஆம் தேதி முதல் சமையலறை மற்றும் கழிவறை உபகரணங்களுக்கு 50 சதவீத வரி , பர்னிச்சர்களுக்கு 30% வரி, கனரக லாரிகளுக்கு 25% வரி என டிரம்ப் தன்னுடைய உத்தரவில் குறிப்பிட்டிருக்கிறார். இந்திய மருந்து உற்பத்தி நிறுவனங்களின் மிகப்பெரிய ஏற்றுமதி சந்தை அமெரிக்கா. குறிப்பாக ஜெனரிக் மருந்துகள் தயாரிக்க கூடிய நிறுவனங்களின் பெரிய வருமானமே அமெரிக்க சந்தையில் இருந்துதான் கிடைக்கிறது. 2024 ஆம் ஆண்டில் மட்டும் இந்தியா அமெரிக்காவுக்கு 31,626 கோடி ரூபாய் மதிப்பிலான மருந்துகளை ஏற்றுமதி செய்து இருக்கிறது. 2025 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதத்தில் மட்டும் இந்தியா 32,500 கோடி ரூபாய் மதிப்புள்ள மருந்துகளை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்து இருக்கிறது.