சபரிமலை கோயில் நடை நவ. 16ல் திறப்பு!!
By : King 24x7 Desk
Update: 2025-11-04 04:20 GMT
மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நவம்பர் 16ம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. மண்டல பூஜை அடுத்த மாதம் 27ம் தேதி வரை நடைபெறுகிறது, அன்று இரவு நடை சாத்தப்படும். மகர விளக்கு பூஜைக்காக டிசம்பர் 30ம் தேதி ஐயப்பன் கோயில் நடை மீண்டும் திறக்கப்படும். மகரவிளக்கு பூஜை ஜனவரி 14ம் தேதி நடைபெறும்; ஜன.20ல் நடை சாத்தப்படும். மாசி மாத பூஜைக்காக சபரிமலை கோயில் நடை பிப். 12ம் தேதி திறக்கப்பட்டு 17ம் தேதி நடை அடைக்கப்படும். பங்குனி மாத பூஜைக்காக மார்ச் 14ம் தேதி சபரிமலை கோயில் நடை திறக்கப்பட்டு 19ம் தேதி நடை சாத்தப்படும் என திருவிதாங்கூர் தேவசம்போர்டு தெரிவித்துள்ளது.