ஹரியானா சட்டமன்றத் தேர்தல் வாக்குறுதி; காங்கிரஸ் ரூ.2,000 அறிவித்த நிலையில் பாஜக ரூ.2,100 அறிவிப்பு!!

Update: 2024-09-19 08:08 GMT

JP Nadda

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

ஹரியானாவில் அனைத்து பெண்களுக்கும் மாதம் ரூ.2,100 உதவித்தொகை வழங்கப்படும் என பாஜக அறிவித்துள்ளது. பெண்களுக்கு மாதம் ரூ.2,000 வழங்குவதாக காங்கிரஸ் அறிவித்த நிலையில் பாஜக ரூ.2,100 அறிவித்துள்ளது. ஹரியானா மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குறுதிகளை பாஜக தலைவர் நட்டா அறிவித்தார். அந்தியோதயா திட்டத்தின் கீழ் சிலிண்டர் ஒன்றுக்கு தலா ரூ.500 உதவித்தொகை வழங்கப்படும். தெற்கு ஹரியானாவில் சர்வதேச அளவிலான ஆரவல்லி வன கீஃபாரி பூங்கா அமைக்கப்படும். தொழிற்கல்வி படிக்கும் பட்டியலின மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படும். ஹரியானாவில் வசிக்கும் அக்னி வீரர்களுக்கு கட்டாயம் அரசு வேலை வழங்கப்படும் என்றும் ஜெ.பி.நட்டா தெரிவித்துள்ளார் .

Similar News