புழல் ஏரியில் இருந்து நீர் திறப்பு 250 கன அடியில் இருந்து 1,000 கன அடியாக அதிகரிப்பு!!
By : King 24x7 Desk
Update: 2025-10-28 10:11 GMT
puzhal
புழல் ஏரியில் இருந்து நீர் திறப்பு 250 கன அடியில் இருந்து 1,000 கன அடியாக அதிகரித்துள்ளது. புழல் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் பாதுகாப்பு கருதி உபரி நீர் திறப்பு அதிகரித்துள்ளது. 21.2 அடி ஆழம் கொண்ட புழல் ஏரியின் நீர்மட்டம் தற்போது 18.65 அடியாக உள்ளது. ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 556 கன அடியில் இருந்து 2,000 கன அடியாக அதிகரித்து வந்து கொண்டிருக்கிறது.