பார்க்கிங் வசதி செய்து தரக்கோரி 400 எல்பிஜி காஸ் டேங்கர் லாரிகள் கேரளாவில் ஸ்டிரைக்!!
கேரளாவில் பார்க்கிங் வசதி செய்து தரக்கோரி 400 எல்பிஜி காஸ் டேங்கர் லாரிகள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளன. கேரள மாநிலம், பாலக்காடு அருகில் காசாகோடுவில் உள்ள மத்திய அரசின் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷனுக்கு (பிபிசி) சொந்தமான எண்ணெய் சுத்திகரிப்பு மையம் உள்ளது. இங்கிருந்து கோவை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு காஸ் டேங்கர் லாரிகள் மூலம் சமையல் காஸ் எடுத்துக்செல்லப்படுகிறது. அந்த இடத்தில் காஸ் டேங்கர் லாரிகளை நிறுத்தி வைப்பதற்கு, பிபிசி நிர்வாகம் பார்க்கிங் வசதி செய்து கொடுக்கவில்லை. இதனால் தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் டேங்கர் லாரிகளை நிறுத்தி வைப்பதால், பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகிறது. இதனால் வாகனங்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உருவாகியுள்ளது. வாகனங்கள் சேதப்படுத்தப்படுவதும், டிரைவர்களை தாக்குவதும் தொடர்ந்து வருகிறது. இதனால் கடந்த 2 நாட்களாக 400 எல்பிஜி டேங்கர் லாரிகள், லோடு ஏற்றி செல்லும் பணியில் ஈடுபடாமல் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.