டெல்லியில் அக்.5 வரை 163 தடை உத்தரவு அமலில் இருக்கும்: அம்மாநில அரசு

Update: 2024-10-01 04:10 GMT

Delhi

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

டெல்லியில் அக்.5 வரை 163 தடை உத்தரவு அமலில் இருக்கும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் போராட்டம் எதிரொலியாக டெல்லியில் 163 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. லடாக்கிற்கு அளித்த வாக்குறுதிகளை ஒன்றிய அரசு நிறைவேற்றவில்லை என்று கூறி சமூக ஆர்வலர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். வக்ஃப் திருத்த மசோதா, எம்சிடி நிலைக்குழு தேர்தல், டியுஎஸ்யு தேர்தல் முடிவுகள் நிலுவையில் இருப்பதை ஒட்டி 163 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் முதல் வாரத்தில் பல அமைப்புகள் ஆர்ப்பாட்டம் நடத்த அழைப்பு விடுத்துள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

Similar News