தமிழ்நாடு – கேரளா எல்லையில் 6 மணி நேரமாக போக்குவரத்து துண்டிப்பு!!

Update: 2024-12-13 06:49 GMT

tamil nadu kerala border flood

கனமழையால் செங்கோட்டை – கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் குளம் உடைந்து 6 மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. விஸ்வநாதபுரம் என்ற இடத்தில் குளம் உடைந்து சாலையில் வெள்ளம் செல்கிறது. குளம் உடைந்து சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் தமிழ்நாடு கேரள இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தென்காசியில் இருந்து வரும் வாகனங்கள் மாற்றுப்பாதையில் செல்கின்றன.

Similar News