எண்ணூர் அனல் மின் நிலையத்தில் பெரும் விபத்து; 9 பேர் பலி!!
By : King 24x7 Desk
Update: 2025-09-30 15:25 GMT
ennore thermal power plant
சென்னை எண்ணூர் அனல் மின் நிலைய பகுதியில் கட்டுமான பணியின் போது ஏற்பட்ட பெரும் விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். வாயலூரில் எண்ணூர் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் நடைபெறும் கட்டுமானப் பணியின் ஒரு பகுதியாக சுமார் 30 அடி உயரத்தில் பிரமாண்ட ராட்சத வளைவு அமைக்கும் பணியில் 10க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றிக்கொண்டிருந்தனர். அப்போது திடீரென சாரம் சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. உரிய பாதுகாப்பு விதிமுறைகளை கடைப்பிடிக்காமல் பணியாற்றியதால் விபத்துக்குள்ளானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உயிரிழந்தவர்கள் வட மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றனர். பலர் படுகாயம் அடைந்த நிலையில் அவர்கள் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.