பிப்.1 முதல் ஒரு சிகரெட் விலை ரூ.72!!

புகையிலைப் பொருட்கள் மீதான கலால் வரி திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதின் எதிரொலியாக சிகரெட் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.;

Update: 2026-01-09 04:11 GMT

தற்போது ரூ.18 விலையில் இருக்கும் ஒரு சிகரெட் விலை விரைவில் ரூ.72 ஆக உயரும். இந்த விலை உயர்வால் புகைப்பிடிப்பதை நிறுத்துவதை ஊக்குவிக்கும் என நம்பப்படுகிறது. விலை உயர்வு பிப்ரவரி 1 ந் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளதாக கூறப்படுகிறது. நாமக்கல் பகுதியில் உள்ள சிகரெட் ஏஜென்ட் தற்போதே கிங் சைஸ் உள்ளிட்ட பல உயர் ரக சிகரெட்டுகளை பதுக்கி வைக்க தொடங்கியுள்ளார். சிகரெட் ஏஜென்ட் தங்களது விற்பனை பிரதிநிதிகள் மூலம் சிறிய கடைகளுக்கு தினந்தோறும் சிகரெட் சப்ளை செய்து வருகிறார். கிங் சைஸ் உள்ளிட்ட பல்வேறு உயர் ரக சிகரெட்டு ஸ்டாக் இல்லை என கூறி வெறும் இரண்டு பாக்கெட் மட்டுமே சப்ளை செய்கின்றனர். ரூ.18 க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த கிங் சைஸ் சிகரெட் விலை ரூ.20 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Similar News