உருவானது காற்றழுத்த தாழ்வு மண்டலம்; நாளை புயலாக வலுப்பெறும்: வானிலை ஆய்வு மையம் தகவல்
By : King24x7 Rafi
Update: 2024-05-24 05:52 GMT
காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை காலை மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெறக்கூடும். புயலாக வலுவடைந்து பிறகு வடக்கு திசையில் நகர்ந்து தீவிர புயலாக வலுப்பெற்று வங்கதேசம் நோக்கி நகரும். மே 26-ம் தேதி நள்ளிரவு வங்கதேசத்தின் சாகர் தீவு மற்றும் கேபபுரா இடையே தீவிர புயலாக கரையை கடக்கிறது.வங்கதேசத்திற்கு அருகே சாகர் தீவுக்கும் கேப்புபராவிற்கும் இடையே ரிமல் புயல் கரையை கடக்கும். தென்கிழக்கு அரபி கடலில் கேரளாவை ஒட்டி மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது என்றும் தெரிவித்துள்ளது.