தி ஆயோக் கூட்டத்தில் பேச விடாமல் தடுத்ததால் மேற்கு வங்க முதல்வர் மம்தா வெளிநடப்பு: பிரதமர் மோடி முன்னிலையில் பரபரப்பு சம்பவம்
By : King24x7 Rafi
Update: 2024-07-28 06:03 GMT
mamta
பிரதமர் மோடி தலைமையில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேசிக் கொண்டிருக்கும் போதே அவரது மைக் அணைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் எதிர்க்கட்சி தரப்பிலிருந்து பங்கேற்ற ஒரே தலைவரான மம்தாவும் கூட்டத்தை பாதியிலேயே வெளிநடப்பு செய்தார். தேசிய முன்னுரிமைகள் மற்றும் கொள்கைகள் குறித்து அனைத்து மாநில அரசுகளும் தங்கள் கருத்தை தெரிவிக்கவும், வளர்ச்சித் திட்டங்களில் வலுவாக தங்களை இணைத்துக் கொள்வதற்கும் நிதி ஆயோக் கூட்டம் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.