பிரதமர் மோடியை கொன்று விடுவேன்” என்ஐஏ கட்டுப்பாட்டு அறையை தொடர்புகொண்டு இந்தியில் மர்ம நபர் கொலை மிரட்டல்: சென்னையில் பரபரப்பு
By : King24x7 Rafi
Update: 2024-05-23 05:53 GMT
Modi
சென்னையில் உள்ள என்.ஐ.ஏ கட்டுப்பாட்டு அறைக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.சென்னை புரசைவாக்கத்தில் உள்ள என்.ஐ.ஏ. கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு இந்தியில் பேசிய மர்ம நபர், பிரதமர் மோடியை கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்துள்ளார். என்.ஐ.ஏ. அதிகாரிகள் கொடுத்த தகவலின் பேரில் சென்னை காவல் துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.